
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கின் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 580 புள்ளிகளுடன் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதல் இரண்டு இடங்களில் ஹங்கேரியின் வெரோனிகாவும், தென் கொரியாவின் யெ ஜிம்மும் உள்ளனர்.
பத்தக்கத்தை வெல்வதற்கான இறுதிச்சுற்றில் நாளை (ஜூலை 28) மாலை 3.30 மணிக்கு மனு பாக்கர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.