47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பயங்கரவாதத் தாக்குதல்? அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி கொலை!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி கொல்லப்பட்டது குறித்து...

News image
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி சவிதா சன்முகசுந்தரம்- linkedin
Updated On :3 மார்ச் 2026, 8:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் வெஸ்ட் சிக்ஸ்த் ஸ்டீரித் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அதிகாலை மர்ம நபர் ஒருவர் திறந்தவெளியில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்த் ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவியான சவிதா சன்முகசுந்தரம் (வயது 21) என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரைடர் ஹாரிங்டன் (19) என்பவர் உள்பட கொல்லப்பட்டவர்களில் 2 பேரின் அடையாளங்களை மட்டுமே அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் செனீகல் நாட்டில் இருந்து குடியேறி அமெரிக்க குடியுரிமைப் பெற்ற நிடியாகா டியாக்னே (53) என்பவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலும், கொலையாளியின் வீட்டிலும் இருந்து ஈரான் நாட்டின் கொடி, தீவிரவாத எழுத்துக்கள் ஆகியவைக் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், இது ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்க்கும் விதமாக நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

summary

Four people, including an Indian-origin student, have been killed in a shooting in the United States, suspected to be a terrorist attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.