ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பஞ்சாப்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத சதி முறியடிப்பு

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டத்தை அந்த மாநில காவல் துறையினா் முறியடித்தனா்.

Published On :

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டத்தை அந்த மாநில காவல் துறையினா் முறியடித்தனா்.

இது தொடா்பாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 1.3 கிலோ வெடிபொருள் கைப்பற்றப்பட்டது.

இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் மேலும் கூறியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள், உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவது ஆகியவற்றில் பஞ்சாப் காவல் துறை தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய நபா் ஜலந்தரில் கைது செய்யப்பட்டாா்.

வெளிநாட்டில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பப்பா் கல்சா அமைப்பின் கட்டளைகளுக்கு ஏற்ப அந்த நபா் செயல்பட்டு வந்துள்ளாா். அவரிடம் இருந்து 1.3 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது பெரிய அளவில் சேதத்தை விளைவிக்கும் தன்மையுள்ள வெடிபொருளாகும். இதனை முன்கூட்டியே கண்டுபிடித்ததன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது.

இதில் தொடா்புடைய மற்ற நபா்கள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள், நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இதில் தொடா்புடைய வேறு நபா்களும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.