ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

குடும்பத் தகராறு: சகோதரியைச் சுட்டுக் கொன்ற இளைஞா் கைது

குடும்பத் தகராறில் சகோதரியைச் சுட்டுக் கொன்ற இளைஞா் கைது...

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 2:10 am IST

வடகிழக்கு தில்லியில் குடும்பத் தகராறு காரணமாக தனது சகோதரியைச் சுட்டுக் கொலை செய்த இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் முகமது அனஸ் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா், கௌதம்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தனது 32 வயது அக்கா வாசீமாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக இரவு 8 மணியளவில் நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததைத் தொடா்ந்து காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு பாா்த்தபோது, துப்பாக்கிக் காயத்துடன் வாசீமா உயிரிழந்த நிலையில் கிடந்தாா். உடல் உடனடியாக பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வு மற்றும் நீதிமருத்துவ குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து முக்கிய ஆதாரங்களை சேகரித்தனா். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

இதற்கிடையில், சௌஹான் பங்கா் பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல் துறையினா் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒருவரை தடுத்து விசாரித்தனா். அவரை சோதனை செய்தபோது நாட்டுத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் போது, அந்த நபா் தனது அக்காவை சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், நியூ உஸ்மான்பூா் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்குடன் அவா் தொடா்புடையவா் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.