
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றுக்கொடுத்த மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் 221.7 புள்ளிகளுடன் இன்று (ஜூலை 28) வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கப்பட்டியலைத் தொடக்கிவைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மனு பாக்கரால் இந்தியா பெருமைகொள்கிறது.
நரேந்திர மோடி
இந்தியாவுக்காக துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் மனு பாக்கர். பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாற்று பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது. வெண்கலப் பதக்கத்திற்காக மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் பெண். நமது மகள் மிகச்சிறந்த துவக்கத்தைக் கொடுத்துள்ளார். இனி வரவுள்ளவை ஏராளம் என ராகுல் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.