மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து ரபாடா விலகல்: மாற்று வீரர் தேர்வு

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகபந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர்சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :7 ஏப்ரல் 2018, 1:42 pm

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27-ந் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது தொடர் நாயகன் விருது வென்ற தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Story image

இந்நிலையில், காயம் காரணமாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து ரபாடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியன் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் லியம் பிளங்கட், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது இவருக்கு முதல் ஐபிஎல் தொடர் ஆகும்.

முன்னதாக, பெங்களூருவில் ஜனவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது இவர் எந்தவொரு அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில், தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.