மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கௌதம் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53, இவன் லீவிஸ் 48, இஷான் கிஷன் 44 ரன்கள் சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் 220 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் சரிவைக் கண்டது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் தரப்பில் போல்ட், கிறிஸ்டியன், ராகுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ரிஷப் பண்ட் 47 ரன்கள் விளாசினார்.
மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


