மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாதனை படைப்பாரா சுனில் நரேன்? கொல்கத்தா முதல் பேட்டிங்

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 

News image
Updated On :14 ஏப்ரல் 2018, 2:32 pm

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி இரவு 8 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் நைட் ரைடர்ஸ் 8 முறையும், சன்ரைஸர்ஸ் 4 முறையும் வென்றுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மா சதமடித்த (109 ரன்கள்) பிறகு இங்கு எந்த பேட்ஸ்மேனும் சதமடிக்கவில்லை. அதுபோல ஈடன் கார்டன் மைதானத்தில் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகளிலும் சன்ரைஸர்ஸ் தோல்வியடைந்துள்ளது.

இப்போட்டியில் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், 100 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்திய 3-ஆவது அந்நிய வீரர் (மலிங்கா, பிராவோ ஆகியோருக்குப் பிறகு) என்ற பெருமையை சுனில் நரேன் பெறுவார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய 11-ஆவது வீரர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.