ஐபிஎல் 10 நாள்கள்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது...


கடந்த 7-ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் ஆரம்பித்து 10 நாள்கள் ஆகிவிட்டன. இதையடுத்து இதுவரையிலான ஆட்டங்களின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார் என்று பார்க்கலாம்.
ஐபிஎல் 10 நாள்கள் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்
அதிக ரன்கள்
| வரிசை எண் | பெயர் | ஆட்டங்கள் | ரன்கள் | ஸ்டிரைக் ரேட் | அதிக ரன் | சிக்ஸர்கள் |
| 1 | சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்) | 3 | 178 | 163.30 | 92* | 12 |
| 2 | ரஸல் (கொல்கத்தா) | 4 | 153 | 239.06 | 88* | 19 |
| 3 | ரிஷப் பண்ட் (தில்லி) | 4 | 138 | 176.92 | 47 | 4 |
| 4 | கே.எல். ராகுல் (பஞ்சாப்) | 3 | 135 | 198.52 | 51 | 8 |
| 5 | ஷிகர் தவன் (ஹைதரபாத்) | 3 | 130 | 141.30 | 78* | 1 |
அதிக விக்கெட்டுகள்
| வரிசை எண் | பெயர் | ஆட்டங்கள் | விக்கெட்டுகள் | எகானமி | சிறந்த பங்களிப்பு |
| 1 | நரேன் (கொல்கத்தா) | 4 | 7 | 5.46 | 3/18 |
| 2 | மார்கண்டே (மும்பை) | 3 | 7 | 8.00 | 4/23 |
| 3 | கிறிஸ் வோக்ஸ் (பெங்களூர்) | 3 | 7 | 10.50 | 3/36 |
| 4 | டேவாட்டியா (தில்லி) | 4 | 6 | 7.13 | 3/18 |
| 5 | போல்ட் (தில்லி) | 4 | 6 | 8.62 | 2/29 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...