/

ரசிகர்களுடன் இணைந்து சாலையில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்! சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் காணொளி!

மும்பை சாலையில் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து சச்சின் கிரிக்கெட் விளையாடிய காணொளி...

News image
Updated On :17 ஏப்ரல் 2018, 10:13 am

எழில்

மும்பை சாலையில் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து சச்சின் கிரிக்கெட் விளையாடிய காணொளி, சமூகவலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் ஐகானாக உள்ளார் சச்சின். அவர் ரசிகர்களுடன் இணைந்து சாலையில் கிரிக்கெட் விளையாடிய காணொளியை வினோத் காம்ப்ளி வெளியிட்டுள்ளார். பிறகு இதே காணொளி சச்சின் ரசிகர்களின் சமூகவலைத்தளப் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மும்பை சாலையில் இரவு வேளையில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த ரசிகர்களுடன் திடீரென இணைந்துகொண்டார் சச்சின். காரிலிருந்து இறங்கி வந்த சச்சின் நேராக பேட்டிங் செய்ய முன்வந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கினார். சில பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார் சச்சின். இந்தத் திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள் பிறகு சச்சினுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதன் காணொளி:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.