ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் இடத்துக்கு முன்னேறிய தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி!
சில நாள்களுக்கு முன்பு 5-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா அணி, நேற்றைய வெற்றியின் மூலம் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது...


ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் இடையே ஆன ஐபிஎல் 15-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது. இறுதியில் 1.1 ஓவர் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 163 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களுடனும், 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் நிதிஷ் ராணா 35 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருது நிதிஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து சில நாள்களுக்கு முன்பு 5-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா அணி, நேற்றைய வெற்றியின் மூலம் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஐபிஎல்-லில் உள்ள 8 அணிகளில் கொல்கத்தா மட்டுமே 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதனால் வரும் நாள்களில் இதர அணிகள் வெற்றி பெறும்போது கொல்கத்தா அணி கீழே இறங்க வாய்ப்புண்டு.
ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்
| வரிசை எண் | அணிகள் | ஆட்டங்கள் | வெற்றிகள் | தோல்விகள் | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| 1. | கொல்கத்தா | 5 | 3 | 2 | 6 | 0.825 |
| 2 | ஹைதரபாத் | 3 | 3 | 0 | 6 | 0.772 |
| 3. | பஞ்சாப் | 3 | 2 | 1 | 4 | 0.116 |
| 4. | சென்னை | 3 | 2 | 1 | 4 | 0.103 |
| 5. | ராஜஸ்தான் | 4 | 2 | 2 | 4 | -0.366 |
| 6. | மும்பை | 4 | 1 | 3 | 2 | 0.445 |
| 7. | பெங்களூர் | 4 | 1 | 3 | 2 | -0.861 |
| 8. | தில்லி | 4 | 1 | 3 | 2 | -1.399 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...