அதிரடி சதம் அடித்த கிறிஸ் கெயில்: இமாலய 11 சிக்ஸர்களின் விடியோ!
கெயில் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு, 11 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 103 ரன்களை குவித்து...


பஞ்சாப் கிங்ஸ் லெவன்-ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 16-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு மொஹாலியில் நடைபெற்றது. முதலில் டாஸ்வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 193 ரன்களை எடுத்தது. கெயில் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு, 11 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 103 ரன்களை குவித்தும், ஆரோன் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களையே எடுக்க முடிந்தது. இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. இதன் மூலம் தொடர் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...