புதிய கேம் செயலியை அறிமுகம் செய்துள்ளது சிஎஸ்கே!
இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து உங்கள் ஆண்டிராய்டு செல்பேசியில் விளையாடலாம்...


11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம், புதிய வீடியோ கேம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Battle Of Chepauk 2 என்கிற இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து உங்கள் ஆண்டிராய்டு செல்பேசியில் விளையாடலாம்.
சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்தப் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...