மீண்டு வரும் தில்லி: சிக்ஸர் மழை பொழிந்து அசத்திய இந்திய இளம் வீரர்கள்! (விடியோ)
பிருத்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட்...


பிருத்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட்...
இந்த மூன்று இளம் இந்திய வீரர்களும் தில்லி அணிக்காக விளையாடிய விதம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சிக்ஸர் மழை பொழிந்து அதிரடி ஆட்டத்தை மூவரும் வெளிப்படுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
நேற்றைய ஐபிஎல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் தில்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது.
தில்லி டேர் டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் கிரிக்கெட் 32-வது ஆட்டம் புதன்கிழமை இரவு தில்லியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடை பட்டது. பின்னர் 1 மணி நேர தாமதத்துக்கு பின் நடுவர்களும், இரு அணிகளின் கேப்டன்களும் ஆடுகளத்தை பார்வையிட்டு விளையாடுவதற்கு ஒப்பதல் தெரிவித்தனர். இதையடுத்து 20 ஓவர்களில் இருந்து 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. ஒரு பந்துவீச்சாளர் தலா 3 ஓவர்கள் வீதம் வீசலாம் என அறிவிக்கப்பட்டது.
தில்லி அணி, 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 45 ரன்களை எடுத்த பிரித்வி, ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் (69), ஷ்ரேயஸ் ஐயர் (50) இணை அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். கேப்டன் ஷ்ரேயர் ஐயர் தலா 3 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 50 ரன்களில் உனதிகட் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் 5 விக்கெட்டை இழந்து 146 ரன்களையே எடுத்தது. ஜோஸ் பட்லர் 67, ஆர் சி ஷார்ட் 44 ரன்களை எடுத்தனர். தில்லி தரப்பில் பெளல்ட் 2 விக்கெட்டையும், மேக்ஸ்வெல், மிஸ்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பிருத்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய மூன்று இந்திய இளம் வீரர்களும் நேற்று சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்தார்கள். இதனால் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட 3 வீரர்கள் 40+ ரன்கள் எடுத்துள்ள சாதனைக்கு மூவரும் சொந்தக்காரர்கள் ஆனார்கள்.
தில்லி அணி புள்ளிகள் பட்டியலில் மெல்ல மெல்ல மேலேறி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் தில்லி அணி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 7-வது இடத்துக்கும், மும்பை அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன. தில்லி அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற வேண்டும் என்றால் இந்த மூன்று இளம் வீரர்களின் பங்களிப்புகள் மிக அவசியம்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...