இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! (படங்கள்)

சிஎஸ்கே வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது... 

News image
Updated On :28 மே 2018, 12:22 pm

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது.

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் கிடி, தாகுர், சர்மா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.  

18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்து சென்னை வெற்றி பெற்றது. 8 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து வாட்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

நேற்றைய பரிசளிப்பு விழாவில், வெற்றியோ தோல்வியோ நாளை சென்னை செல்வதாக முடிவெடுத்தோம். ரசிகர்களைச் சந்திக்கவுள்ளோம் என்று தெரிவித்தார். இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களை நேரில் காண ரசிகர்கள் பெரும்திரளாக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்கள்.

இன்று மாலை சிஎஸ்கே அணியினர் விமானம் மூலமாக மும்பையிலிருந்து சென்னைக்கு வந்திறங்கினார்கள். அங்கு, சிஎஸ்கே வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பழைய விமான நிலையத்துக்கு வீரர்கள் அழைத்து வரப்பட்டார்கள். பிறகு, அங்கிருந்து நட்சத்திர விடுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.