புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஃபேஸ்புக் பதிவுகளில் 'ஐபிஎல் 2018' புது சாதனை!

ஐபிஎல் 2018-ல் எந்தெந்த வீரர்களும், அணிகளும் அதிகம் பேசப்பட்டன போன்ற தகவல்களை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :31 மே 2018, 2:02 pm

Raghavendran

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 2 வருட தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. மே 27-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் 3-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்நிலையில், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 11-ஆவது சீசன் தான் அதிகம் பிரபலமடைந்துள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'ஐபிஎல் 2018' தொடர்பான பதிவுகள், கமெண்ட்டுகள் மற்றும் ரியாக்ஷன்கள் ஆகியன மொத்தம் 425 மில்லியன் முறை கொண்டாடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் பேசப்பட்ட அணிகளில் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடம்பெற்றுள்ளன.

Story image

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகம் பேசப்பட்ட வீரராக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பதியப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'தல ரிட்டன்ஸ்' மற்றும் 'விசில் போடு' ஆந்தம் அதிகம் விரும்பப்பட்ட பதிவாகியுள்ளது.

வங்காளப் புத்தாண்டுக்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் முஸ்தாபிஸூர் ரஹ்மான், வங்காள மொழியில் கூறிய 'ஷுபோ நபோ பர்ஷோ' என்ற வாழ்த்து அதிகம் விரும்பிய பதிவில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.