(ரோ)ஹி(த்)ட்மேன் படைத்த 3 முக்கிய சாதனைகள்?
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 4 சதங்கள் விளாசி, 500 ரன்களுக்கு மேல் குவித்து ரோஹித் ஷர்மா பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். 92 பந்துகளில் 7 பவுண்டரி, 5 இமாலய சிக்ஸர்களுடன் 104 ரன்களைக் குவித்தார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய பேட்ஸ்மேன், உலகக் கோப்பையில் அதிக முறை ஆட்ட நாயகன் மற்றும் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா 3 முக்கியச் சாதனைகளைப் படைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் விவரம் பின்வருமாறு:
- 351 - ஷாஹித் அஃப்ரிடி
- 326 - கிறிஸ் கெயில்
- 270 - சனத் ஜெயசூர்யா
- 230* - ரோஹித் ஷர்மா
- 228* - மகேந்திர சிங் தோனி
உலகக் கோப்பையில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியர்களின் விவரம் பின்வருமாறு:
- 4 - யுவராஜ் சிங் (2011)
- 3 - சச்சின் டெண்டுல்கர் (2003)
- 3 - ரோஹித் ஷர்மா (2019)*
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களின் விவரம் பின்வருமாறு:
- 673 - சச்சின் டெண்டுல்கர் (2003)
- 544 - ரோஹித் ஷர்மா (2019)*
- 523 - சச்சின் டெண்டுல்கர் (1996)
- 482 - சச்சின் டெண்டுல்கர் (2011)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.