26 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

ஜாவித் மியான்டட் வைத்திருந்த 26 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. 
26 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக பாக். ஜாம்பவான் ஜாவித் மியான்டட் வைத்திருந்த 26 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. 

ஜாவித் மியான்டட் கடந்த 1993-இல் மே.இ.தீவுகளுக்கு எதிராக 64 இன்னிங்ஸ்களில் 1930 ரன்களை விளாசி, அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 

இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இச்சாதனையை முறியடிக்க கோலிக்கு 19 ரன்களே தேவைப்பட்ட நிலையில், 34 இன்னிங்ஸ்களில் அவர் இச்சாதனையை முறியடித்தார். இதன்மூலம் மே.இ.தீவுகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

அதுமட்டுமில்லாமல்...

  • 42-ஆவது ஒருநாள் சதம்
  • 67-ஆவது சர்வதேச சதம்
  • கேப்டனாக 20-ஆவது ஒருநாள் சதம்
  • மே.இ.தீவுகளுக்கு எதிராக 8-ஆவது ஒருநாள் சதம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்கள்:

  • 1931* விராட் கோலி
  • 1930 ஜாவித் மியான்டட்
  • 1708 மார்க் வாஹ்
  • 1666 ஜாக்குவஸ் கலீஸ்
  • 1624 ரமீஸ் ராஜா
  • 1573 சச்சின் டெண்டுல்கர்

ஒரு அணிக்கு எதிராக தனிப்பட்ட பேட்ஸ்மேன் எடுத்த அதிக சதங்கள்:

  • 9 சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா
  • 8 சச்சின் டெண்டுல்கர் vs இலங்கை
  • 8 விராட் கோலி vs இலங்கை
  • 8 விராட் கோலி vs ஆஸ்திரேலியா
  • 8 விராட் கோலி vs மேற்கிந்திய தீவுகள்

ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் குவித்த கேப்டன்கள்:

  • 6 விராட் கோலி vs மேற்கிந்திய தீவுகள்
  • 5 ரிக்கி பாண்டிங் vs நியூஸிலாந்து
  • 4 ரிக்கி பாண்டிங் vs இங்கிலாந்து
  • 4 ரிக்கி பாண்டிங் vs இந்தியா
  • 4 ஏபி டி வில்லியர்ஸ் vs இந்தியா

ஒவ்வொரு கேப்டன்களின் தலைமையிலும் விராட் கோலி விளாசிய சதங்கள்:

  • 20 கேப்டனாக
  • 19 எம்.எஸ்.தோனி தலைமையில்
  • 02 வீரேந்திர சேவாக் தலைமையில்
  • 01 கௌதம் கம்பீர் தலைமையில்

ஒரு அணிக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் 2 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்கள்:

  • 34 விராட் கோலி v மேற்கிந்திய தீவுகள்
  • 37 ரோஹித் ஷர்மா v ஆஸ்திரேலியா
  • 40 சச்சின் டெண்டுல்கர் v ஆஸ்திரேலியா
  • 44 விவியன் ரிச்சர்ட்ஸ் v ஆஸ்திரேலியா
  • 44 விராட் கோலி v இலங்கை
  • 45 மகேந்திர சிங் தோனி v இலங்கை

என மேலும் சில சாதனைகளையும் படைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com