பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மும்பை டெஸ்ட் தேநீர் இடைவேளை: முரளி விஜய், கோலி சதம்; இந்தியா 348/6

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:53 pm

மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகள்  மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது.

அணித்தலைவர் விராத் கோலி 83 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி ஆகிய இருவரும் தலா 2 விக்கட்டுளை வீழ்த்தினர்.

முன்னதாக முதல் பாதியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் டெஸ்ட் போட்டியில் தனது எட்டாவது சதத்தினை நிறைவு செய்தார். உணவு இடைவேளைக்கு பிறகு அவர் 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.தேநீர் இடைவேளைக்குப் பிறகு விராத் கோலியும் சதமடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.