யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து கூகிளில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு வீரர் யார் தெரியுமா?

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள தகவலின்படி 2016-ம் ஆண்டு அதிகமாக தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில்...

News image
Updated On :25 டிசம்பர் 2016, 7:59 am

DIN

புதுதில்லி: பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள தகவலின்படி 2016-ம் ஆண்டு அதிகமாக தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய பேட்மிண்டன் நம்பிக்கை நட்சத்திரமனா பிவி சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அந்த ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட துறைசார் பிரபலங்கள் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்ப்டுத்திய பிவி சிந்து முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் அவர் எம்எஸ் தோணி, விராட் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி நுதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்ற தீபா கர்மாகர், மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்க்ஷி   ஆகியோரும் இந்தியாவில் இருந்து அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து உள்ளனர்.

இந்த பட்டியலில் தோணி, கோலி, சச்சின் தெண்டுல்கர், பேட்மிண்டன் வீரர் கிதாம்ப்ரி ஸ்ரீகாந்த் மற்றும் டென்னிஸ் சூப்பர்ஸ்டார் சானியா மிர்சா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

உலகம்முழுமைக்குமான ஒட்டுமொத்த தேடல் பட்டியலில் பிவி சிந்து இரண்டாவது இடம் பிடித்து உள்ளார், முதல் இடத்தை அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்டு டிரம்ப் பிடித்து உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.