பெர்த் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா ஆஸ்திரேலியா?
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு 539 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்...


பெர்த்: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு 539 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸி ., அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அந்த அணி முதல் இன்னிங்சில் 242 ரன்னில் சுருண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும்,தென்ஆப்பிரிக்காவின் வேகத்தில் வீழந்தனர். அந்த அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் இன்னிங்சில் 2 ரன்களே பின்தங்கிய நிலையில் இருந்த தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
சிறப்பாக விளையாடிய அந்த அணியின் டுமினி 141 ரன்னும், எல்கர் 127 ரன்னும் குவிக்க 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்திருந்தது. குவிண்ட்டன் டி காக் 16 ரன்னுடனும், பிலாண்டர் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி காக் மற்றும் பிலாண்டர் ஆகிய இருவரும் அரைசதம் அடித்த நிலையில் டி காக் 64 ரன்னிலும், பிலாண்டர் 73 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் விளையாட வந்த மகாராஜ் 41 ரன்கள் எடுத்த போது, தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 540 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்சில் அந்த அணி 2 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 539 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷேன் மார்ஷ், வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருக்கும்போது வார்னர் ஆட்டம் இழந்தார். மார்ஷ் 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு கவாஜா உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 34 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வோக்ஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
5-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் மறுமுனையில் கவாஜா அரைசதம் அடித்தார்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. கவாஜா 58 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 15 ரன்னுடனும் தற்போது களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 370 ரன்கள் தேவைப்படுகிறது. கடைசி நாளில் 370 ரன்கள் அடிப்பது மிகக்கடினம். என்பதால் ஆஸ்திரேலியா பெர்த் டெஸ்டில் தோல்வியை நோக்கி நகர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...