யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தோல்வி!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த  இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்தார்.

News image
Updated On :27 நவம்பர் 2016, 8:09 am

DIN

கோவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த  இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்தார்.

ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வந்தன. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில் சீன தைபே வீராங்கனை டாங் சூ யிங்யியை, இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய டாங் சூ யிங் , இந்தியாவின் பி.வி. சிந்துவை 15-21, 17-21 என்ற நேர் செட்களில் வென்றார்.

இந்தியா சார்பாக ரியோ ஒலிம்பிக் போட்டியில்முதல் முறையாக வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த சிந்து, அண்மையில் நடந்து முடிந்த சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் சமீபத்தில் முதல்முறையாக பட்டம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.