மொகாலி டெஸ்ட்: 283 ரன்னில் ஆட்டமிழந்த இங்கிலாந்து; இந்தியா நிதான ஆட்டம்!
மொஹாலி டெஸ்ட்டின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆட்டமிழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸை நிதானமாக ஆடி வருகிறது.


மொகாலி: மொஹாலி டெஸ்ட்டின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆட்டமிழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸை நிதானமாக ஆடி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 89 ரன்னும், பட்லர் 49 ரன்னும் எடுத்தனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியது. தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் ஆட்டம் மேலும் 15 ரன்கள் சேர்த்த நிலையில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 93.5 ஓவர்களில் 283 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது.ஆண்டர்சன் 13 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமதுஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். அஸ்வினுக்கு ஒரே ஒரு விக்கெட்தான் கிடைத்தது.
பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவங்கியது. முரளி விஜய்யும், பார்த்தீவ் பட்டேலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை. 15-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய் ஆட்டம் இழந்தார். பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவர் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 39 ஆக இருந்தது.
அடுத்து புஜாரா களம் வந்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்து இருந்தது. பார்த்தீவ் பட்டேல் 37 ரன்னிலும், புஜாரா 8 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...