சென்னை டெஸ்ட்: நாளை முதல் டிக்கெட் விற்பனை
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.


இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. ரூ.300, ரூ.500, ரூ.3000, ரூ.4000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. ஒருவருக்கு அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் அனுமதிக்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் பெற விரும்புபவர்கள் www.bookmyshow.com என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட் பெறலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...