பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அசார் அலி முச்சதம்: வலுவான நிலையில் பாகிஸ்தான்!

தொடக்க வீரர் அசார் அலி 469 பந்துகளில் 2 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 302 ரன்கள் குவித்தார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:45 am

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 155.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

அந்த அணியின் தொடக்க வீரர் அசார் அலி 469 பந்துகளில் 2 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 302 ரன்கள் குவித்தார்.

துபையில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், தனது முதல் இன்னிங்ஸில் 155.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அசார் அலி முச்சதம் அடித்தபிறகு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.