டபிள்யூ.டி.ஏ டென்னிஸ் தொடர்: அரை இறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வி
சிங்கப்பூரில் நடந்து வரும் டபிள்யூ.டி.ஏ பெண்கள் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் சானியா மிர்சா– ஹிங்கிஸ் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.


சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்து வரும் டபிள்யூ.டி.ஏ பெண்கள் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் சானியாமிர்சா– ஹிங்கிஸ் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.
உலக அளவில் டாப்–8 வீராங்கனைகள் பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் சிங்கப்பூரில் தற்போது நடந்து வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவின் அரை இறுதியில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிஸ்ஸின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணையானது, பலம்மிக்க ரஷியா நாட்டை சேர்ந்த இலினா வெஷ்னினா– இகேதெரினா மேக்ரோவா ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி கடுமையாக போராடி தோல்வியை தழுவியது. இதன்மூலம் தொடர்ச்சியாக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் சானியா - ஹிங்கிஸ் இணையின் கனவு தகர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...