இந்திய சுற்றுப்பயணம் கடினமான ஒரு சவால்: வில்லியம்சன் ஒப்புதல்! 

விரைவில் நடைபெற உள்ள இந்திய சுற்றுப்பயணமானது உண்மையிலேயே கடினமான ஒரு சவாலாக இருக்கும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கென் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுப்பயணம் கடினமான ஒரு சவால்: வில்லியம்சன் ஒப்புதல்! 
Updated on
1 min read

விரைவில் நடைபெற உள்ள இந்திய சுற்றுப்பயணமானது உண்மையிலேயே கடினமான ஒரு சவாலாக இருக்கும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கென் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு விரைவில் வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 12-ம் தேதி மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. அதற்குப் பிறகு அக்டோபர் 16 முதல் 29 வரை 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் இன்று அளித்த பேட்டி விபரம் வருமாறு:

உண்மையில் இந்தியா விளையாடுவதற்கு கடினமான ஒரு இடம்தான். அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் அது இன்னும் கடினமானதாக மாறியிருக்கிறது. அதே நேரம் இதை ஒரு அருமையான சவாலாகவும் எடுத்துக் கொள்ளலாம். உலகத்தரம் வாய்ந்த ஒருஅணியுடன் விளையாடும் தருணத்தை எங்கள் வீரர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.

மேலும் இங்கே உள்ள ஆடுகளங்கள் மிகவும் தடுமாற வைக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரம் உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்களை எதிர் கொள்ள வேண்டி வருமென்பதால் , உண்மையில் எங்கள் அணியின்  பேட்ஸ்ட்மேன்களுக்கு இது சோதனைதான்.

இவ்வாறு வில்லியம்சன் தனது பேட்டியில்  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com