
இங்கிலாந்தின் முன்னாள் பேட்ஸ்மேன் கிரிம் ஹிக் ஆஸ்திரெலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2020-ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக கிரிம் ஹிக் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் பிறந்தவரான கிரிம் ஹிக் இங்கிலந்து அணிக்காக 1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 65 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.ஒய்வு பெற்ற பின்னர், 2013-ஆம் ஆண்டு,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 'உயர் செயலாக்க பயிற்சியாளராக' நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் தெடர்பாக கருத்து தெரிவித்த ஹிக், 'ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்காக இதுவரை ஆற்றி வந்த பணி பெரும் மன நிறைவை அளித்தது. இப்போது அளிக்கப்பட்டிருக்கும் புதிய பணியையும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்' என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டெரென் லெஹ்மான் இது குறித்து கூறும் பொழுது, 'ஹிக் போன்ற ஒரு திறமை வாய்ந்த வீரரோடு இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.