சச்சின் டெண்டுல்கர் பற்றி எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் நடிக்க அவரது ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த திரைப்படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்ப்பைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் தயாரிப்பு நிறுவனம் புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
'லிவ் மோர் வித் சச்சின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியில் பங்கு பெறுவோர் , தங்களிடம் இருக்கின்ற, மைதானத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ எடுக்கப்பட்ட சச்சின் தொடர்பான வீடியோக்களை www.livemorewithsachin.com என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். வந்து சேரும் வீடியோக்களில் இருந்து சிறந்ததாக தேர்தெடுக்கப்படும் வீடியோவானது சச்சின் பற்றிய படத்தில் பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட ரசிகர் சச்சினை நேரில் சந்திக்க வாய்ப்பும் கிடைக்கும்.
இன்று தொடங்கி, நவம்பர் 6-ஆம் தேதி வரை ரசிகர்கள் வீடியோக்களை பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
அதிவேக டெலிவரி சேவை: இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் அமேசான்!

பைக்குகளுக்கு இலவச பெட்ரோல்! பங்க் உரிமையாளர் கொடுத்த Surprise!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


