தரவரிசை பட்டியல்கள் என்னை ஊக்கப்படுத்துவதில்லை: விராத் கோலி

தரவரிசை பட்டியல்கள் என்னை ஊக்கப்படுத்துவதில்லை: விராத் கோலி

தரவரிசை பட்டியல்கள் என்னை ஊக்கப்படுத்துவதில்லை என்பதால் அவற்றை பற்றிக் கவலைப்படுவதில்லை என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோலி  தெரிவித்துள்ளார்.
Published on

தரவரிசை பட்டியல்கள் என்னை ஊக்கப்படுத்துவதில்லை என்பதால் அவற்றை பற்றிக் கவலைப்படுவதில்லை என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோலி  தெரிவித்துள்ளார்.

இந்திய-நியூசிலாந்து அணிகள்  மோதும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்  போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று கொல்கத்தாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கோலி கூறியதாவது:

தரவரிசை பட்டியல்கள் என்னை ஊக்கப்படுத்துவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பான நமது அணியை கவனித்தால், நமது விளையாட்டு திறன் மேம்பட்டு இருப்பதைக் காணலாம்.அதனால் நம் எளிதாக பல விஷயங்களை மறந்தும் விடலாம். எப்போதும் தர வரிசையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் செய்ய வேண்டிய செயல்களை  மறந்து விடுவோம்.  

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில்  வெற்றி பெற்றால் இந்தியா டெஸ்ட் தர வரிசைப்  பட்டியலில் முதல் இடம் பிடிக்கலாம் என்பது பற்றிக் கேட்க பட்ட பொழுது, 'நீங்கள் போட்டியி ல் பேட்டிங் செய்து கொண்டு இவருக்கும் பொழுது, சாதனைக் கணக்குகளை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய செயல்களில் இருந்து உங்கள் கவனத்தை அது  மாற்றி விடும். நானும் நமது அணியினரும், கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்த வேண்டியே விளையாடுகிறோம்'.

இவ்வாறு கோலி  தனது பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com