எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சச்சின் ஆவணப் படம்: 23-இல் ஒளிபரப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த ஆவணப் படம் வரும் 23-ஆம் தேதி சோனி இஎஸ்பிஎன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 11:34 am

தினமணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த ஆவணப் படம் வரும் 23-ஆம் தேதி சோனி இஎஸ்பிஎன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இந்த ஆவணப் படம், 1989 முதல் 2013 வரையிலான காலங்களில் சச்சின் ஆடிய முக்கிய ஆட்டங்கள், அவர் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உருவானது, 2011 உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகும்.
ஏப்ரல் 24-ஆம் தேதி சச்சினின் 44-ஆவது பிறந்த நாளாகும். அதை முன்னிட்டு 23-ஆம் தேதி மாலையில் அவருடைய ஆவணப் படம் ஒளிபரப்பாகிறது.
இது குறித்து ஆவணப் படத்தின் இயக்குநர் கெளதம் சோப்ரா கூறுகையில், 'இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சச்சினின் ரசிகர்கள் ஆகியோருக்கு இந்த படம் மறக்க முடியாத நினைவாகவும், அவர்களால் கொண்டாடப்படக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். சச்சினோடு நேரத்தை செலவிட்டு உலகக் கோப்பையை வென்ற அனுபவத்தை அவரிடம் இருந்து கேட்டறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.