அடுத்த சீசனுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் போட்டித் தொடர்கள் அறிவிப்பு
அடுத்த சீசனுக்கான இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டித் தொடர்களின் விவரம் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.


இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சீசனுக்கான போட்டித் தொடர் விவரங்கள் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.
வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் இந்த உள்நாட்டு சீசன் தொடர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. பிறகு இந்திய அணி வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
முதலாவதாக வரும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தொடங்கி அக்டோபர் 11-ந் தேதி வரை நடைபெறும் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.
பின்னர், அக்டோபர் 22 முதல் தொடங்கி நவம்பர் 7 வரை நடைபெறும் தொடரில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
இறுதியாக இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சீசனில் மட்டும் மொத்தம் 23 சர்வதேச போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி அங்கு நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...