வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இங்கிலாந்து உள்ளூர் அணிக்கு விளையாடும் அஸ்வின்

இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அஸ்வின், இங்கிலாந்தின் உள்ளூர் அணியான வார்சிட்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2017, 2:06 pm

DIN

இந்தியாவின் நட்சத்திர வீரராகவும், உலகின் தலைசிறந்த முன்னணி ஆல்-ரவுண்டராகவும் திகழ்பவர் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறார். 

தற்போது இலங்கை அணியுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 17 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்ஸில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அதிகபட்சமாகும். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ஜொலித்தார். 

ஆனால், அடுத்து நடக்கவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்தின் உள்ளூர் கவுன்டி அணியில் விளையாட அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் வார்சிட்ஷைர் அணி நடப்பு சீசனில் விளையாட அஸ்வினை ஒப்பந்தம் செய்தது. 

ஆகஸ்ட் 28-ந் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இருந்தே பங்கேற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக புஜாரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரும் இங்கிலாந்து கவுன்டி அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார்கள். அதுபோல நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடமும் கவுன்டி அணி ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.