ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

இந்தியா 51/2; 214 ரன்கள் முன்னிலை!

மதிய உணவு இடைவேளையின்போது 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது...

News image
Updated On :5 டிசம்பர் 2017, 6:19 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்துள்ளது. பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா மதிய உணவு இடைவேளையின்போது 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை 3-ஆம் நாள் ஆட்டம் முடிவில் இலங்கை 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. சண்டிமல் 147, லக்ஷன் சன்டகன் ரன்கள் இன்றி களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று சண்டிமல் 164 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 135.3 ஓவர்களில் 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரை 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 214 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தவன் 15, புஜாரா 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். விஜய் 9, ரஹானே 10 ரன்களுடன் ஆட்டமிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், மோசமான காற்றுத் தரம் காரணமாக இலங்கை வீரர் லக்மலுக்கு இன்று மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 5-வது ஓவரை லக்மல் வீசிய பிறகு அவரால் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. மைதானத்திலேயே அவர் வாந்தி எடுத்தார். இதையடுத்து அவர் மைதானத்திலிருந்து வெளியேறி வீரர்களின் ஓய்வறைக்குச் சென்றார். இலங்கை வீரர்கள் பலரும் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் தற்போது விளையாடிவருகிறார்கள். பிறகு 10-வது ஓவரின்போது மீண்டும் களமிறங்கிய லக்மல், உடனடியாக தனது பந்துவீச்சைத் தொடர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.