ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பந்துவீச கூடுதல் நேரம்: மே.இ. அணி கேப்டன் ஹோல்டருக்குத் தடை!

பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு...

News image
Updated On :5 டிசம்பர் 2017, 8:28 am

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

இதில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் மே.இ. அணி 3 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து ஹோல்டருக்கு போட்டி ஊதியத்தில் 60 சதவீதம் அபராதமும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மே.இ. வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வரும் 9-ம் தேதி அன்று ஹேமில்டனில் தொடங்கவுள்ள 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஹோல்டர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.