கல்லூரி மாணவியைக் கிண்டலடித்த சேவாக்! சமூகவலைத்தளத்தில் புதிய சர்ச்சை!

முக்கியமான பிரச்னையில் போராடும் கல்லூரி மாணவியைக் கிண்டலடித்த சேவாக்குக்கு பலர் கண்டனம்
கல்லூரி மாணவியைக் கிண்டலடித்த சேவாக்! சமூகவலைத்தளத்தில் புதிய சர்ச்சை!
Updated on
1 min read

தில்லி ராம்ஜாஸ் கல்லூரியில் உமர் காலித் பங்கேற்ற கருத்தரங்குக்கு எதிராக ஏபிவிபி (அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்) மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அதில் வன்முறை ஏற்பட்டது. இதற்கு தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குர்மேகர் கெளர் என்கிற மாணவி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தார்கள். இதனால் ஏபிவிபி அமைப்பினரால் அச்சுறுதலுக்கு ஆளானார் கெளர்.

குர்மேகர் கெளர், போரில் உயிரிழந்த ராணுவ வீரரின் மகள். ஏபிவிபி அமைப்பினர் அவருக்கு நெருக்கடி அளித்ததை அடுத்து, என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை. ஆனால் போர் தான் கொன்றது என்கிற வாசகத்தைக் கையில் ஏந்தியபடி உள்ள புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

இதைக் கிண்டலடிக்கும் விதமாக, நான் முச்சதம் அடிக்கவில்லை. என்னுடைய பேட் தான் அடித்தது என்று ட்வீட் செய்தார் கிரிக்கெட் வீரர் சேவாக். ஒரு முக்கியமான பிரச்னையில் போராடும் கல்லூரி மாணவியைக் கிண்டலடித்த சேவாக்குக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com