விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கண்தானம் செய்தார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அஸ்வின் தனது கண்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார்.

News image
Updated On :8 ஜனவரி 2017, 8:42 am

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அஸ்வின் தனது கண்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஆவர். தனது மயக்கும் சுழற்பந்து வீச்சு மூலம் நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

அவர் சென்னையில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் நடந்த கண் தான் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்றார். அப்பொழுது அவர் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அதில் அவர் , 'நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள்' என்று ரசிகர்களிடம் வற்புறுத்தி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ‘கண்தானம் செய்வது என்பது எனது மனைவி பிரித்தியின் நெடுநாள் கனவாகும். எனது ரசிகர்களும் இதை பின்பற்றி தங்களது கண்களை தானம் செய்வார்கள் என்று நம்புகிறேன். இதில் உள்ள திருப்தி வேறு எதிலும் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்‘ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.