கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி: ரோஜர் பெடரர் சாம்பியன் !

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நாடலைத் தோற்கடித்து, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:51 am

DIN

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நாடலைத் தோற்கடித்து, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நாடல் ஆகிய இருவரும் மோதினர்.

பரபரப்பாக ஐந்து செட்டுகள் வரை நடந்த இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் பெடரர் ஸ்பெயினின் நடாலைத் தோற்கடித்தார்.

பெடரர் வெல்லும் 18 -ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் வெல்லும் 5-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.