அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

50-ஆவது டெஸ்டில் களமிறங்கும் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 50-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார்.

News image
Updated On :24 ஜூலை 2017, 7:26 pm

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 50-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார்.
காலேவில் வரும் புதன்கிழமை தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்போது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார்.
இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 7 முறை 10 விக்கெட்டுகளையும், ஓர் இன்னிங்ஸில் 25 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின்.
50-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது குறித்து அஸ்வின் கூறியதாவது: கடந்த காலங்களை திரும்பிப் பார்த்தால் ஏதாவது இலக்கு நிர்ணயித்து நான் விளையாடியிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. அப்படியிருக்கையில் எந்த இலக்கையும் நிர்ணயிக்க முடியாது.
சர்வதேச கிரிக்கெட் இப்போது கடும் சவாலானதாக மாறியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு நாளும் நமக்கு சிறப்பானதாக அமைவது முக்கியமாகும். கடந்த கால சாதனைகளையே நினைத்துக் கொண்டிருந்தால், உங்களால் எதிர்காலத்தில் எதையும் சாதிக்க முடியாது.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள காலே மைதானம் நான் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மைதானம் ஆகும். நான் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய நேரத்தில் 10 விக்கெட் வீழ்த்தியதால் அது எனக்கு சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. இப்போது மீண்டும் காலேவில் விளையாடவிருப்பது முந்தைய இனிமையான நினைவுகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.