கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து

அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த 7-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 2020-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் என ஐசிசி வட்டாரங்கள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

DIN

அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த 7-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 2020-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் என ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஐசிசியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், '2018-இல் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பெரும்பாலான அணிகள் அதிக அளவில் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளன. அதனால் டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில்லை. 2020-இல் மீண்டும் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும். அது தென் ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.