தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆஸ்திரேலிய பாட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன்! 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய  பாட்மிண்டன் ஓபன் போட்டித் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:17 pm

DIN

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய  பாட்மிண்டன் ஓபன் போட்டித் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய  பாட்மிண்டன் ஓபன் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும் சீனாவின் சென் லாங்கும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 22-20, 21-16 என்ற நேர் செட்களில் சென் லாங்கை வீழ்த்தினார்.

இதற்கு முன்பாக சென் லாங்கிடம் ஸ்ரீகாந்த் ஐந்து முறை இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வாரம் இந்ததோனேசியா பேட்மிண்டன் ஓபன் போட்டியில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து,  தற்பொழுது ஆஸ்திரேலிய ஓபனிலும் வெற்றி பெற்று ஸ்ரீகாந்த் சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.