பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தேசிய கீதம் ஒலித்தபோது பபிள்கம் மென்ற விவகாரம்: பர்வேஸ் ரசூல் பதில்!

போட்டி ஆரம்பிக்கும் முன்பு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பர்வேஸ் ரசூல் பபிள் கம் மென்று கொண்டிருந்தது...

News image
Updated On :1 மார்ச் 2017, 6:22 am

பர்வேஸ் ரசூல், சமீபத்தில் கான்பூரில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 போட்டியில் பங்கேற்றார். 

போட்டி ஆரம்பிக்கும் முன்பு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பர்வேஸ் ரசூல் பபிள் கம் மென்று கொண்டிருந்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதைக் கண்டித்துப் பலரும் விமரிசனம் செய்தார்கள். அவர் தேசிய கீதத்தை அவமதித்தாகவும் விமரிசனம் எழுந்தது.

இதுகுறித்து தற்போது பேட்டியளித்துள்ளார் ரசூல். பேட்டியில் அவர் கூறியதாவது: கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாட அனுமதியுங்கள். அவர்களை எந்த அரசியலுக்கும் இழுக்கவேண்டாம். விளையாட்டில் கவனம் செலுத்தவே நான் விரும்புகிறேன். இந்தச் சர்ச்சைகள் என்னைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறேன். நான் வசிக்கும் ஜம்மு காஷ்மிர் பகுதியிலிருந்து ஒருவர் இந்திய அணிக்குத் தேர்வாவதே கடினம். ஆனால் இதுபோன்று நடக்கும்போது வேதனையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.