ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

டெஸ்ட்: வீரர்களுக்கு டிரிங்ஸ் கொண்டுவந்த கோலி! (வீடியோ)

வீரர்களை உற்சாகப்படுத்தவும் புதிய ஆலோசனைகளை வழங்கவும் இன்று இடைவேளையின்போது..

News image
Updated On :25 மார்ச் 2017, 7:09 am

தினமணி

மிகவும் முக்கியமான தர்மசாலா டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடவில்லை.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளுமே 1-1 என சம நிலையில் உள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. எனவே, இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

வலது தோள்பட்டையில் காயம் கண்டுள்ள கோலி, தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார். காயத்துக்காக கோலி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தபோதிலும், தகுந்த முன்னேற்றம் ஏற்படாததால் விலகியுள்ளார். 

இந்நிலையில் வீரர்களை உற்சாகப்படுத்தவும் புதிய ஆலோசனைகளை வழங்கவும் இன்று இடைவேளையின்போது வீரர்களுக்கு டிரிங்ஸ் கொண்டுவந்தார் கோலி. அப்போது ஆட்டத்தின் போக்கு குறித்து வீரர்களிடம் சில நொடிகளில் விவாதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.