வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

10-ஆவது சீசனை மறக்க விரும்புகிறேன்: விராட் கோலி

பத்தாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மறக்க விரும்புவதாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

News image
Updated On :15 மே 2017, 8:25 pm

DIN

பத்தாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மறக்க விரும்புவதாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியைத் தோற்கடித்தது பெங்களூர் அணி.
எனினும் பெங்களூர் அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது.
ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியதாவது: இந்த சீசன், நாங்கள் மறக்கக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. நாங்கள் செய்த தவறுகள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
டெல்லிக்கு எதிராக கிடைத்த வாய்ப்பை எங்கள் வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அடுத்த சீசனில் வாய்ப்பிருந்தால், இப்போதுள்ள வீரர்களில் 3 முதல் 5 பேரை தக்கவைத்துக் கொள்வோம். இந்த சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியோடு முடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.