சாம்பியன்ஸ் டிராபியின்போது கோலி ஃபார்முக்கு திரும்புவார்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின்போது விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபியின்போது கோலி ஃபார்முக்கு திரும்புவார்
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின்போது விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறினார்.
மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் இந்திய அணியின் கேப்டனான கோலி ஃபார்மை இழந்து தவித்து வருகிறார். இந்த நிலையில் கபில்தேவ் கூறியதாவது:
கோலியின் ஃபார்மை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவருடைய திறமை மற்றும் ஆற்றலைப் பற்றி நான் நன்றாக அறிவேன். அவர் சரிவிலிருந்து மீண்டு வருவார். அவர் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு காரணம் எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.
கோலி, இந்திய அணிக்கு முக்கியமான வீரர். அவர் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் ஒட்டு மொத்த அணியும் ஊக்கம் பெற்றுவிடும். எப்போதுமே கேப்டன் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால், வெற்றி கிடைத்துவிடும்.
ஜஸ்பிரித் பூம்ராவை முதல்முறையாக பார்த்தபோது, அவர் இவ்வளவு பெரிய பெளலராக வளர்ச்சி பெறுவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் வலுவான மனநிலை கொண்டவர். பந்துவீசும் ஸ்டைல் துல்லியமாக இல்லாதபோது 'லைன் அன்ட் லென்த்'தில் பந்துவீசுவதும், யார்க்கர்களை வீசுவதும் கடினம். ஆனால் பூம்ராவின் பந்துவீசும் ஸ்டைல் துல்லியமாக இல்லாவிட்டாலும்கூட, அவர் அபாரமாக பந்துவீசுகிறார். அவர் என்ன நினைக்கிறாரோ, அதை செய்துவிடுகிறார்.
மற்ற வீரர்களைவிட அவர் மிகுந்த மனத்திடம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கு நான் மிகுந்த மரியாதை அளிக்கிறேன்.
இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, அஸ்வின், ஜடேஜா என தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியைப் பொறுத்தவரையில் இந்திய அணி, மற்ற அணிகளைவிட வலுவாக இருக்கிறது என்றார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதவுள்ள ஆட்டம் குறித்து கபில்தேவிடம் கேட்டபோது, 'இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில்தான் இருக்கிறது.
அதனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலை இருக்கிறது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com