சாம்பியன்ஸ் டிராபி கடைசி பயிற்சி ஆட்டம்: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் கடைசி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது இந்தியா.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் கடைசி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது இந்தியா.
இந்திய அணியை பொருத்த வரையில், நியூஸிலாந்துடனான தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. மறுபுறம், வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.
இந்திய அணி பேட்டிங் வரிசையை பொருத்த வரை, தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் பயிற்சி ஆட்டத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் காண உள்ளார். காய்ச்சலில் இருந்து முழுவதுமாக இன்னும் மீளாத யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது குறித்தும் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை.
முதல் பயிற்சி ஆட்டத்தில் சொற்ப ரன்களில் திரும்பிய ரஹானே, இந்த ஆட்டத்தில் அதை சரிசெய்வார் எனத் தெரிகிறது. அதே ஆட்டத்தில் மழையின் காரணமாக மிடில் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனவே, இந்த ஆட்டத்தில் அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். அதேபோல், கோலி-தோனி இணை சிறப்பாக ரன் குவிக்கும் என எதிர்பார்க்கலாம். இதனிடையே, மிடில் ஆர்டரில் கேதர் ஜாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பந்துவீச்சைப் பொருத்த வரையில், முதல் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் நியூஸிலாந்தை 189 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது. சமி, புவனேஸ்வர் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அதே உத்வேகத்துடன் வங்கதேசத்தை பந்தாட உள்ளனர். மொத்தத்தில், இந்த 2-ஆவது பயிற்சி ஆட்டத்தைக் கொண்டு சாம்பியன்ஸ் டிராபியில் களம் காண உள்ள இந்திய அணியின் "பிளேயிங் லெவன்'-ஐ முடிவு செய்யலாம்.
அணிகள் விவரம்
இந்தியா
விராட் கோலி (கேப்டன்) ரோஹித் சர்மா, ஷிகர் தவன் அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங் தோனி (விக்கெட் கீப்பர்)
கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா
தினேஷ் கார்த்திக், ஜடேஜா
முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வின் உமேஷ் யாதவ்
வங்கசேதம்
மோர்டாஸா (கேப்டன்)
தமீம் இக்பால், இம்ருல் கயெஸ்
செளம்யா சர்கார், சபீர் ரஹ்மான்
மஹ்முதுல்லா ரியாத், அல் ஹசன்
முஷ்ஃபிகர் ரஹீம், ரூபெல் ஹொûஸன்
முஷ்டாஃபிஸýர் ரஹ்மான்
டஸ்கின் அகமது, மெஹதி ஹசன் மொஸாடெக் ஹொûஸன்
சுன்ஸாமுல் இஸ்லாம், ஷஃபியுல் இஸ்லாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...