யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சீன ஓபன் பாட்மிண்டன் காலிறுதியில் சிந்து; வெளியேறினார் சாய்னா

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். எனினும், சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டு

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:36 pm

DIN

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். எனினும், சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
சீனாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான சிந்து தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அந்நாட்டு வீராங்கனையான ஹான் யூவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சிந்து தனது காலிறுதியில் சீனாவின் தகுதிச்சுற்று வீராங்கனையான காவ் ஃபாங்ஜியை சந்திக்கிறார்.
இதனிடையே, மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்ட சாய்னா, அதில் 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார். இத்துடன் யமாகுசியை 5 முறை சந்தித்துள்ள சாய்னா, 4-ஆவது முறையாக தோல்வி அடைந்துள்ளார்.
உலகின் 11-ஆம் நிலை வீரருமான பிரணாய், ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டார். அதில் உலகின் 53-ஆம் நிலை வீரரான ஹாங்காங்கின் செயுக் யியுவை எதிர்கொண்ட பிரணாய் 19-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.