தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜூனியர் தடகளம்: புதிதாக 3 சாதனைகள்

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிதாக 3 தேசிய சாதனைகள் எட்டப்பட்டன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:37 pm

DIN

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிதாக 3 தேசிய சாதனைகள் எட்டப்பட்டன.
18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான உயரம் தாண்டுதலில் ஹரியாணாவின் ருபீனா யாதவ் 1.81 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். முன்னதாக, மேற்கு வங்கத்தின் ஸ்வப்னா பர்மன் கடந்த 2013-இல் 1.71 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது.
14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் பிகாரின் அவினாஷ் குமார் 6.79 மீட்டர் தாண்டி சாதனை படைத்தார். முன்னதாக, ஒடிஸாவின் சுனாராம் முர்மு கடந்த 2008-ஆம் ஆண்டு 6.63 மீட்டர் தாண்டியதே அதிகபட்சமாக இருந்தது.
16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான ஈட்டி எறிதலில் ஹரியாணாவின் ஜோதி 41.24 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். முன்னதாக, தமிழகத்தின் ஹேமமாலினி கடந்த 2015-ஆம் ஆண்டு 39.69 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.