காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள்: பொலார்ட் சாதனை!

இன்றைய போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் ஒட்டுமொத்தமாக 500 சிக்ஸர்கள் அடித்துள்ளார்...

News image
Updated On :18 நவம்பர் 2017, 9:49 am

எழில்

டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை கிறிஸ் கெயில் மட்டும்தான் 500 சிக்ஸர்களுக்கும் அதிகமாக அடித்துள்ளார். இதுவரை மொத்தம் 772 சிக்ஸர்கள். 

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மற்றொரு வீரரான கிரோன் பொலார்ட், டி20 போட்டியில் 500 சிக்ஸர்கள் அடித்த 2-வது வீரர் என்கிற சாதனையைப் பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற பிபிஎல் போட்டியில் (பங்களாதேஷ் பிரீமியர் லீக்) டாக்கா டைனமைட்ஸ் - ராஜ்ஷஹி கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாக்கா அணியில் இடம்பெற்ற பொலார்ட் 7-வதாகக் களமிறங்கி 25 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டாக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

இன்றைய போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் ஒட்டுமொத்தமாக 500 சிக்ஸர்கள் அடித்துள்ளார் பொலார்ட். 399 சிக்ஸர்களுடன் இவருக்கு அடுத்த இடத்தில் மெக்குல்லம் உள்ளார்.  

டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள்

கெய்ல் 772
பொலார்ட் 500
மெக்குல்லம் 399
டி ஸ்மித் 347
வார்னர் 314

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.