ரஞ்சி காலிறுதியில் மும்பை vs கர்நாடகா; முதல்முறையாகத் தகுதி பெற்ற கேரளா!
கேரள அணி முதல்முறையாக ரஞ்சி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது...


இந்த வருட ரஞ்சி போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து காலிறுதியில் கர்நாடகாவும் மும்பையும் மோதவுள்ளன.
லீக் சுற்றுகளின் முடிவில் குரூப் ஏ பிரிவில் கர்நாடகா, தில்லி, பி பிரிவில் குஜராத், கேரளா, சி பிரிவில் மத்திய பிரதேசம், மும்பை டி பிரிவில் விதர்பா, பெங்கால் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. கேரள அணி முதல்முறையாக ரஞ்சி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
இதையடுத்து காலிறுதியில் மோதவுள்ள அணிகள்
மும்பை vs கர்நாடகா
தில்லி vs மத்திய பிரதேசம்
குஜராத் vs விதர்பா
கேரளா vs பெங்கால்
டிசம்பர் 7 அன்று நான்கு காலிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து டிசம்பர் 17 அன்று அரையிறுதியும் டிசம்பர் 29 அன்று இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...